தேவன் - உச்ச ஆன்மா (Day 2)

பொதுவாக இவ்வுலகில் மனிதர்களாகிய நம் அனைவருக்கும் அவரவருக்கு ஒரு தந்தை . இருப்பர். அதுபோல் ஆத்மாவாகிய நம் அனைவருக்கும் தந்தை இருக்கின்றார் .நாம் அனைவரும் . ஆத்மாக்கள் அவர் பரமாத்மா ஆவார்..

 

உயர் தந்தை

உடல் கொடுத்த தந்தைக்கு எப்படி நம்மைப் போலவே உடலின் அமைப்பு உள்ளதோ, அதே போல் ஆத்மாவின் தந்தை பரமாத்மாவும் ஆத்மாவைப் போலவே ஒரு சிறு ஒளிப் . புள்ளியாக இருகின்றார். இவரே இறைவன் – பரமாத்மா – உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை என அழைக்கப்படுகிறார்.

கடவுள் சின்னம்

ஆத்மா எப்படியோ அது போலவே பரமாத்மாவும். இறைவன் பரமாத்மா புள்ளி வடிவானவர். ஜோதி சொருபமானவர். அழியாதவர் அழிக்கமுடியாதவர்.. அவர் அன்பு, ஆனந்தம் , தூய்மை.  ஞானம் , பண்பு போன்ற அனைத்து தேவீக குணங்களின் கடலாக விளங்குகின்றார்.  அதனாலேயே இறைவனிடம் சென்று வணங்கும் போது, இறைவா ! எனக்கு நிம்மதி கொடு ,
அமைதி கொடு , என கேட்கின்றோம். அவர் சத்சித் ஆனந்த சொரூபமானவர். இவர் அஜென்மா அதாவது பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர் . தாயின் காப்பதில் வராதவர்.அசரீரி அதாவது உடல்லற்றவர். அபோக்த அதாவது எதையும் அனுபவம் செய்தவர். அசோசித்த அதாவது எதைப்பற்றியும் சிந்திக்காதவர் ஆவார்.

இவரை இந்துக்கள் சிவன் என்றும் ( ஸ்ரீமத் பகவத் கீதை),முகமதியர்கள் அல்லா என்றும் ( குரான் ), கிருஸ்துவர்கள் ஜெகோவா என்றும் ( பைபிள் ),சீக்கியர்கள் ஏக் ஓம்கார் என்றும் (கிரகந்தகம்) இறைவனை வெவ்வேறு பெயர்களால் அழைகிறார்கள் , இவைகள் அனைத்திற்கும் பொருள் ஒன்று தான். இறைவன் ஒளி வடிவானவர் என்பதேயாகும்.,. இதனை ஒவ்வொரு மதங்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையும், குரானும், பைபிலும் , கிரகந்தகமும் பறைசாற்றுகின்றன. நதிகள் பல இடங்களிலிருந்து புறப்பட்டாலும் அனைத்தும் போய் ஒன்று

சேருமிடம் கடலே ஆகும். இறைவன் பரமாத்மா அனைத்து மதங்களுக்கும் பொதுவானவன். இறைவன் ஒருவனே . அவனே ஜோதிர் வடிவமான சிவன்.

 

இறைவனின் பெயர்

இயற்கையில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயர் மற்றும் ஒரு வடிவம் உள்ளது. நாம் ஒவ்வொரு பிறப்பின் உடலுக்கும் , ஒரு பெயரைப் பெறுகிறோம். ஆனால் இறைவன் பிறப்பு எடுப்பதில்லை அப்படி பிறப்பு ஏதும் எடுக்காதவரின் பெயர் என்ன ? அவருடைய பெயர் நிலையானதாக எல்லைக்கப்பற்பட்டதாக இருக்க வேண்டும் அல்லவா ?

இவரின் பெயரே ’சிவன்” ஆகும் . சிவம் என்றால் சவம் ஆகாதவர். அதனால் தான் நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் இறைவா! என்னை காப்பாற்று என்று நம்மை அறியாமலே அவரை அழைக்கின்றோம். எனவே இறைவன் பரமாத்மா சிவன் தன் குழந்தைகளாகிய நமக்கு ஒரு போதும் துக்கம் தருவதில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது

இறைவன் சிவன் பரமாத்மா அன்பு தந்து அரவணைப்பதால் அவர் அம்மாவாக (Mother ) ஆகிறார். நம்மிடம் கனிவு ( ம ) கண்டிப்புடன் பழகுவதால் அவரே அப்பாவாகிறார் (Father ). நம்மனைவரையும் நல்வழிப்படுத்த வேண்டிஅழியாத ஞானம் ஆசிரியர் ( Teacher ). ஆசானாகிறார் ஆனால் கஷ்டம் வரும் போது மட்டுமே அவரை நாம் நினைக்கின்றோம். இதுவே நமது பழக்கமாக உள்ளது. எனவே, இச்சூழலில் இறைவனே தன்னைப் பற்றிய உண்மையை கூறுகிறார்.

இந்து மதத்தில் சிவனை சிவலிங்க வடிவில் பூஜிக்கிறார்கள்.. அல்லது சிவனை ஜோதிர்லிங்கம் எனவும் கூறுகிறார்கள். இதன் பொருளே சிவன் ஒளிவடிவானவர் என்பதாகும்.

முஸ்லீம்கள் சங் - யே - அஸ்வத் (புனித கல்) என்று அழைக்கப்படும் ஒரு முட்டை வடிவ கறுப்பு கல்லை முத்தமிட்டு வணக்குகிறார்கள் , இது மெக்காவின் புனித மசூதி காபாவில் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் மற்றும் அரேபியர்களின் புனிதா நூலான குரானில் இதனை காணமுடியும்.

இயேசு கிறிஸ்துவும் (கிறித்துவம்) கடவுள் ஒளி என்று கூறி விவரிதுள்ளார். மகாத்மா புத்தர் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். இறைவன் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிக்கு அப்பற்ற்பட்டவர் என்பதை உணர்ந்தார். அவரும் இறைவன் ஒளியாக உள்ளார் என்றே கூறினார்.

இறைவனோடு நம் உறவு

ஒரு தந்தை என

தந்தை என்றாலே படைப்பவர் ( creator ) என்பது பொருள். இறைவன் என் தந்தையாகி எனக்கு சொர்க்கதின் ஆஸ்தியை தருகிறார். பொற்காலத்திற்கு ( Golden age ) அழைத்துச் செல்கிறார். இறைவன் ஒருபோதும் ஆத்மாக்களை படைப்பதில்லை. சொர்க்கத்தை மட்டுமே படைக்கிறார். அவருக்கு யார் யாரெல்லாம் சொர்க்கதின் படைப்பிற்கு உதவி செய்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பிராப்தியை தருகிறார். 

ஒரு ஆசிரியராக

இறைவன் – ஞானக் கடலாக உள்ளார். அவர் வாழ்க்கைக்கு தேவையான தெய்வீக் படிப்பு எனும் அழியா ஞானத்தை கற்றுத்தருகிறார். அதன் அடிப்படையில் தனது வழி காட்டல் படி நடக்கும் குழந்தைகளுக்கு நற்பண்புகள் நிறைந்த தெய்வீக குணங்களை அளிக்கிறார். விளைவுகளைப் பற்றி விளக்குகிறார்.அவரே உயர்ந்ததிலும் மிக உயர்ந்த எல்லைக்கப்பாற்பட்ட ஆசான். சரியான ஆசனாகி நல்ல ஆலோசனைகள் பல தந்து அதன் பலனைப் பெற படிப்பு கற்று தருபவர்.


ஒரு நண்பனாக

இறைவனோடு நாம் அனைத்து சம்மந்தமும் வைக்கமுடியும். அதில் ஒன்று நண்பனாகும். இவன் நண்பனாக இருக்கும் போது அவரிடம் பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.தவறு செய்துவிட்டாலும் அவரிடம் கூறி மன்னிப்பு கேட்கலாம். ஆடலாம் பாடலாம் விளையாடலாம். இப்படிப்பட்ட நண்பனிடம் அனைத்து ஆலோசனைகளும் கேட்டு அதன் படி நடக்கலாம்.உயிராகிய ஆத்மாவை காக்கும் தோழனாகும்.

 

ஒரு வழிகாட்டியாக

இறைவன் - சத்தியம் இல்லாத இவ் உலகில் சத்தியமான பாதையை காட்டுகிறார். சத்தியம் மற்றும் அசத்தியத்தை உணர்த்துகிறார். இவ்வுலக வாழ்வில் அனைவரும் முக்திக்காக விடுதலை. ஆனால் நம் தந்தை ஜீவன் முக்தியையும் தர வந்துள்ளார். மேலும் கடந்த கால கர்ம கணக்குகளை முடிக்கும் வழியை காட்டுகிறார். அதன் பின் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து தன்னோடு நம் வீடாகிய பரம்தாமம் அழைத்துச் செல்ல வந்துள்ளார். இவ் உறவே உயர்ந்த பேரின்பத்தை அடைய வழி காட்டும் உறவாகும். 

© 2020 Shiv Baba Service Initiative

  • BK YouTube channel
  • Main Audio channel
  • BK Shivani facebook
BK sustenance logo.png